அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை , வெந்தயக்கீரை சாம்பார் ...பஞ்சாபி சமோசா !!!!

மீண்டும் சந்திப்போம்................அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை,Ragada Patties ,தட்டு தோசை , வெந்தயக்கீரை சாம்பார் . . !!!!cheese பராத்தாஸ் அனியன் cheese பராத்தாஸ் ,காரட் லெமன் பருப்பு ..!!!

2/21/18

வாங்க வாங்க எல்லோரும் பார்ட்டிக்கு வாங்க :)

 மியாவ்ஸ் ஸ்பெஷல் :)

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் அன்பு மியாவ் அதிராவ் .
நீங்க இதேபோல் எப்பவும் சந்தோஷமா எல்லாரையும் கலாய்த்துக்கொண்டு கலாட்டா காமெடியில் கலக்கிக்கொண்டு நிறைய தமிழில் ஸ்பெல்லிங் மிஸ்டேக்கிக்கொண்டு புதுப்புது ரெசிப்பிகளை வாரி வழங்கி கதைகள் எழுதி இதிகாசங்களை புதிதாக  உருவாக்கி :) எல்லாரையும் மயக்கம்போட வைக்க வேண்டுமென இறைவனிடம் பிரார்த்திக்கின்றேன் .

2/14/18

எங்க வீட்டுக்கு மாலை நேரம் வந்த விஸிட்டர் :) robin or robin redbreast


 அனைவருக்கும் வணக்கம் :)

ஒரு குட்டியூண்டு இடைவேளைக்கப்புறம்  மீண்டும்  உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி . எங்க வீட்டுக்கு மாலை நேரம் வந்த விஸிட்டர் :)

இவர் எங்க யுனைட்டட் கிங்டமின் தேசிய பறவை :)

                                                                                 

கீழிருக்கும் படம் ஜூம் செய்து எடுத்தது இது அனைவருக்கும் தெரிந்திருக்கும் பறவை தெரியாதோருக்கு ,இது எங்கள் ஐரோப்பிய நாடுகளில் பரவலாக காணப்படும் ராபின் ரெட் ப்ரெஸ்ட் .Robin Red Breast பற்றி இந்த சுட்டியில் வாசிக்கவும் .
எங்க தோட்டத்துக்கு எப்பவும் விதவிதமா கலர்கலரா பறவைகள் வருவாங்க ,சாம்பல் அணில்கள் புறாக்கள் எல்லாம் முன்பு அடிக்கடி வந்தாங்க .ஜெஸி ,மல்ட்டி மூணாவது வீட்டு கருவாண்டி ,லில்லி ,
அப்புறம் பிரபு, கிட்டு ,பில்லா இவங்க எல்லாரும் பறவை பிடிக்கும் கூட்டணி அமைச்சதால் பறவைகள் வருகை அதிகாலை 5-6 மணியோடு நின்றுவிட்டது.அதுவும் எங்க மல்ட்டி சரியான வேட்டைக்காரி டிவியில் எறும்பு காட்சி வந்தால் அதுக்கே ஓடிப்போய் பிடிப்பா :)
                                                                                    

  .இப்போ கடும் குளிர்க்காலமாதலால்  இந்த பறவை பிடிக்கும் கூட்டணி குளிருக்கு வீட்டுக்குள் முடங்கிடறதால் கொஞ்சம் மாலை நேரத்திலும் பறவைகள் பயமின்றி வந்து போறாங்க .சரி சம்பவத்துக்கு வரேன் மூன்று வாரங்கள் முன்பு ஒரு சனிக்கிழமை மாலை 5 மணி வாக்கில் மகளின் வயலின் கிளாசுக்கு புறப்பட்டுக்கொண்டிருந்தோம் அந்நேரம் பார்த்து மல்ட்டி வெளியேபோகணும்னு அடம்பிடிக்கவும் பின் கதவை திறந்து விட்டேன் .5 நிமிடம் கழித்து கதவை திறந்தா  மல்ட்டி எதோ வைத்து விளையாடறா குதிச்சி குதிச்சி விளையாடறா !!நான் உண்மையில் எதோ சுண்டெலியைத்தான் பிடித்து விளையாடறா என்று நினைத்து கணவரை கத்தி கூப்பிட்டு எலியை காப்பாற்ற சொன்னேன் .மகளும்  ஓடிவர பார்த்து சொன்னாள் ..மா இட்ஸ் எ பெர்ட் !! ஒருவழியா மல்டிகிட்டருந்து பறவையை எடுத்தால் அது உடலெல்லாம் குளிர்ந்து கால்கள் மடங்கி உயிர் போகும் தருணத்தில் இருந்தது :( ஆனால் உடம்பில் சிறு காயமும் இல்லை .அதிர்ச்சியிலேயே மயங்கி இருக்கு .அதை பார்த்ததும் மகளுக்கு அப்செட் எங்கிருந்தோ ஒரு ஷூ பெட்டியை தூக்கிட்டு வந்து அதில் பால்பாயிண்ட் பேனாவால் கடகடன்னு குத்தி ஓட்டை போட்டு அதில் அந்த மயங்கிய பறவையை வைத்து மூடிவைச்சா .அந்த பெட்டியை பார்த்ததும் எனக்கு  சிரிப்பு :) எதுக்குன்னா அந்த  பெட்டியின் மேலே எழுதியிருக்கும் வாசகத்தை பாருங்க :)

                                                                                   


                                                                                     

கிளாசுக்கு போக வேண்டாம் நான்  வீட்லருந்து பறவையை  பார்க்கணும்னு ஒரே அடம் வேறு .அந்த பெட்டியோட அவ ரூமுக்கு கொண்டு போய்ட்டா .நான் ஒரு துளி நீரை அதன் அலகின் மீது திறந்து  ஊற்றினேன் பிறகு நான்  இறங்கி வந்தும் மகள்  மேலே இருந்தா ஒருவழியா சமாதானப்படுத்தி  வயலின் கிளாசுக்கு அவளை கூட்டிட்டு போனோம் அவள் அறையில் பெட்டில் பெட்டிக்குள் ராபின் பறவை .மற்ற ரெண்டு குட்டி பிசாசுங்களும் கீழ் அறையில் வைத்து சாத்திவிட்டு போனோம் :).ஒரு மணிநேரம் கழித்து வீட்டுக்கு திரும்பியவுடன் மகள்  நேரே ஓடியது அவளது அறைக்கு நான் பயத்தில் போகலை .ஐந்து நிமிடம் கழித்து பொண்ணு என்னை அழைத்தாள் .ரூம் உள்ளே போய் பார்த்தா ராபின் பறவை தெம்பா மூலைமுடுக்கெல்லாம் பறந்துக்கிட்டிருக்கு :) .மகள் என்னாச்சோ என்று பெட்டியை திறந்து பார்க்க அறையின் சூட்டுக்கு பறவை எழும்பி பறக்க துவங்கி விட்டது . கதவை நன்கு சாத்திட்டு நான் கணவர் மகள் எங்களோடு பறவை மட்டும் அறைக்குள் இருந்தோம் .பறவைக்கு குழப்பம் ஒரு விளக்கை மட்டும் வெளிச்சத்துக்கு போட்டோம் நிறைய வெளிச்சம் அதற்க்கு கண் கூசலாம்னு டிம் லைட் போட்டு ஜன்னலை திறந்தேன் அப்படியும் பறவை அங்குமிங்கும் பறந்து ஓடிக்கொண்டிருந்தது ..ஆனாலும் அந்த நேரத்திலும் சாம்சங் டேப்லட்டில் படத்தை எடுத்தேனே :) 

                                                                                    


                                                                      
                       எப்படி இங்கே ஒரு பறவை பிரேமில் இருக்குன்னு                                                                     ஆச்சர்யப்படுதோ ராபின் ??              


இதற்குள் வீட்டில் பூனை கூட்டணிக்கு வீட்டுக்குள் பறவை வாசனை தெரிந்து கதவை தள்ளுதுங்க ரெண்டுமா சேர்ந்து :) 

                                                                                    இறுதியில் ஒரு வழியா ஜன்னலில் விளிம்பில் உட்கார்ந்தது ராபின் மெதுவா அதை துரத்த அதுவும் பறக்க ரெடியாகும்போது  அந்த தருணம் பார்த்து  வெளிப்புறம் மியாவ் என்று மூணாவதா ஒரு குரல் மயக்கமே வந்தது ,,அது கருவான்டியின் குரல் ஜன்னல் வழியா என் மகள்  ரூமுக்கு வருவான் :) 
ஜன்னலின் வழியே இந்த பூனைக்கூட்டம் அடிக்கடி போயிட்டு வருவது காரணம் நாங்க ஸோலார்ப்பேனல் போட்டிருக்கிறோம் அதன் அடியில் பறவைகள் உட்க்காரும் அதையும் பிடிப்பதே இவர்களின் பொழுது போக்கு :)

                                                                           

நல்ல காலம்  அதற்குள் ராபின் பறந்து விட்டது :) எனக்கு ஆச்சர்யம் சாகும் தருவாயில் இருந்த பறவை எப்படி இவ்ளோ சுறுசுறுப்பாச்சின்னு .
மகள் சொன்னாள் //நான் அதுக்கு CPR செஞ்சேன்மா என்று :) பறவை பிழைத்ததே சந்தோஷம்னு நினைத்துக்கொண்டேன் .அது மாலை நேரங்களில் இருட்டும் நேரத்தில் பல குட்டி பறவைகள் பூச்சி பிடித்து கொண்டிருக்கும் அந்த நேரம் பார்த்து மல்ட்டி வாயில் ராபின் மாட்டியிருக்கு :)
                                                        **********


ரொம்ப நாள் கழிச்சி எல்லாரும் வரீங்க இந்தாங்க நான் செய்த மொறுமொறு பக்கோடா  அப்புறம் பிட்ஸா ..


                                                                               
                 இந்த பிட்ஸா எதில் செஞ்சேன்னு கண்டுபிடிங்க 
                                                             பார்க்கலாம் :)

                                                                             

                                                                                   


இது என்னன்னா :) ஒண்ணுமில்லைங்க நம் kohlrabi /நூக்கல் 
காயை தோல் சீவி பரோட்டா அளவு தடிப்பம் வட்டமாக வெட்டி அதில் ஆர்கானிக் டொமெட்டோ சாஸ் தடவி சீஸ் (இதுவும் ஆர்கானிக் வெரைட்டி) அதில் வெங்காயம் தக்காளி ஆலிவ்ஸ் சேர்த்து அவனில் பிட்ஸா செய்வதுபோல் செய்தென் :) மினி வெஜிடபிள் பிஸ்ஸா :)


அன்புடன் ஏஞ்சல் :) 

1/12/18

தைப்பொங்கல் நல்வாழ்த்துக்கள் :)

நட்புக்கள் அனைவருக்கும் இனிய தைப்பொங்கல் நல்வாழ்த்துக்கள் :)                                                                              

எனது வலைப்பயணம் துவங்கிய நாள்முதல் எனக்கொரு நட்பு இருக்காங்க ரொம்ப அழகா எழுதுவாங்க இப்போ வலைப்பதிவுகளில் எழுதுவதில்லை  முகப்புத்தகத்தை விட்டு வர மாட்டேங்கிறாங்க :) 
அவங்களுக்கும் பொங்கல் அன்னிக்குத்தான் பிறந்தநாள் 
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் தங்கச்சி :)
இது தங்கைக்கு செய்த வாழ்த்து அட்டை .

என் பொண்ணு Miss Selfridge கடைக்கு போனப்போ இந்த பையை கொண்டு வந்தா :) அது காகிதப்பை விடுவேனா நான் :) அதை பேப்பர் ஷ்ரேடரில் போட்டு பையை பூவாக்கி இந்த கார்டை செய்தேன் :)அன்புடன் ஏஞ்சல் :)

1/4/18

உங்களிடம் சில வார்த்தைகள் ....கேட்டால் கேளுங்கள்

உங்களிடம் சில வார்த்தைகள் ....கேட்டால் கேளுங்கள் 
===============================================


                                                                                     
                                      
                                      இது நம்ம நண்பர் மதுரைத்தமிழன் ஆரம்பித்து வைத்துள்ள தொடர் பதிவு .உண்மையாக அவரால் எனக்கும் ஒரு அட்வைஸ் கிடைத்தது அந்த பதிவை அவர்பக்கம் தேடோதேடென்று தேடினேன் கண்ணுக்குப்படலை ..அது நட்பு பாராட்டும்  விஷயத்தில்  அளவாக இருத்தல் இது அநேகமா  2012 /2013 இல் எழுதினார்னு நினைக்கிறேன். அப்புறம் அதிராமியாவ்  கிட்டயிருந்தும் அட்வைஸ் கிடைச்சிருக்கு :) எப்பவுமே மியாவ் என்னை கு .கு என்று சொல்வாங்க :) அது குறைமாதக்குழந்தை :) நான்  எல்லாத்துக்கும் அவசரப்படுவேன் அதை வச்சி சொல்வாங்க :) அந்த அட்வைஸ்  நான்  இப்போல்லாம் கவனமுடன் follow செய்கிறேன் .தாங்க்ஸ் மியாவ் :) 
அப்புறம் நெல்லைத்தமிழனின் பின்னூட்டங்கள் .  உங்கள் பிள்ளைகள் கொடுத்துவைத்தவங்க எல்லா விஷயத்தையும் அழகாய் அவதானித்து விளக்குவார். சிலருடைய எழுத்துக்கள் நடவடிக்கைகள் பின்னூட்டங்கள் நம்மை பண்படுத்தும் .எனக்கு வாழ்க்கையை புரட்டிப்போட்டு அடிவாங்கிய சம்பவம் அப்படி அடிபட்டு நொந்தநேரத்தில் கிடைத்த அட்வைஸ் அப்படியெல்லாம் பெரிய கஷ்டம்ல்லாம் கடவுள் எனக்கு தரவில்லை.ஏன்னா அவருக்கு தெரியும் சின்ன  கஷ்டமும் தாங்கும் வலிமைகூட இல்லாத பதர் நான் என்று  . :) .அநேகமா இந்த பதிவுக்கு நான் பொருத்தமான நபர்தானா என்றும் எழுதுமுன் தயக்கம் வந்தது .  

நான் யாருக்கும் அட்வைஸ் தருமளவு பக்குவப்படவில்லை ஆனால் நான் கற்ற பெற்றவற்றை இங்கே பகிர்கிறேன் 

12/31/17

மனதுக்கு இதம் தரும் செய்தி /Christmas Dinner for homeless ,மற்றும் நான் செய்த ஸ்வீட்ஸ் :) Rose Cookies
                                                                           வலைப்பூ    நட்புக்கள் அனைவருக்கும் மற்றும் எனது பதிவுகளை  தவறாமல் ஒளிந்திருந்து படிக்கும் அன்பர்களுக்கும் :) இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் .


                                                                               

 முதலில் மனதுக்கு இதம் தரும் செய்தியுடன் பதிவை துவங்குகிறேன் 
(பின்னாடி பதிவில்  வரப்போகும் விஷயங்களால் பலர் அதிர்ச்சிக்குள்ளாகலாம் :) 

இங்கிலாந்தில்  லண்டன் EUSTON இரயில் நிலையம் மிகவும் பிரபலமானது மற்றும் பிஸியான ஸ்டேஷன் .ஒவ்வொரு ஆண்டும் இந்த இரயில் நிலையம் வழியா மான்செஸ்டர் பெர்மிங்ஹம் ,கிளாஸ்கோ ,லிவர்பூல் எடின்பரோ மற்றும் பல்வேறு   இடங்களுக்கு 71 மில்லியன் மக்கள் பிரயாணம் செய்கின்றனர் .கிறிஸ்மஸ் அன்று இந்த இரயில் நிலையம் மற்றும் இன்னும் சில இயங்காது ..இந்த ஆண்டு கிறிஸ்துமஸ் அன்று இந்த euston ரயில் நிலையத்தில் 200 ஹோம்லெஸ் /இருப்பிடம் இல்லாதோருக்கு உணவு இலவசமா பரிமாறியிருக்காங்க .